விநாயகர் கோவிலில் ராசி நட்சத்திரம் சொல்லி சாமி கும்பிட்ட மஸ்தான்..! இதுதான் சமூக நல்லிணக்கம்..!

0 2050

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பவானி கூடுதுறையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி கும்பிட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்த அமைச்சர் செஞ்சி.மஸ்தான், அங்குள்ள பிள்ளையார் கோவிலில், தமிழக முதலமைச்சரின் குடும்பத்தினர் பெயரை குறிப்பிட்டு, தனது ராசி நட்சத்திரம் கூறி, அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.

முன்னதாக தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கின்ற 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை வாழ் தமிழர்களுக்காக, முதற்கட்டமாக கட்டப்பட்டு வரும் 3500 வீடுகளுக்கான கட்டுமான பணிகளையும் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments