யோகிபாபு நடித்த "ஷூ" திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் மீது கடத்தல் புகார்..!

0 1346

நடிகர் யோகிபாபு நடித்த ஷூ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்ததில் ஏற்பட்ட பணத்தகராறில், விநியோகஸ்தர் மதுராஜின் அலுவலக ஊழியர்களை கடத்திய புகாரில், படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அக்டோபர் 14 ஆம் தேதி வெளியான ஷூ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சாலிகிராமத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் மதுராஜ்க்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கார்த்திக் விற்றுள்ளார்.

17 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்த நிலையில், மனைவியின் பிரசவத்திற்காக மதுராஜ் மதுரைக்கு சென்று விட்டார்.

பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சாலிகிராமத்தில் அலுவலகத்திலிருந்த ஊழியர்கள் கோபி, பென்சர் ஆகியோரை கார்த்திக் தரப்பினர் தாம்பரத்திற்கு கடத்திச்சென்று கத்தி முனையில் மிரட்டி 70 ஆயிரம் ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது.

மதுரையிலிருந்து திரும்பிய மதுராஜ் அளித்த புகாரின் பேரில் 4 பேரை கைது செய்த விருகம்பாக்கம் போலீஸார், தலைமறைவான கார்த்திக் உள்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments