ஆப்கானிஸ்தானில், எண்ணெய் நிறுவன ஊழியர்களைச் ஏற்றிச் சென்ற வாகனத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்...!

வடக்கு ஆப்கானிஸ்தானில், எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 7 மணியளவில் ஹைதரன் என்ற எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஊழியர்களுடன் பால்க் பகுதி வழியாக சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments