விபத்துக்குள்ளான சரக்கு லாரியில் இருந்து ஆப்பிள்களை சூறையாடிய கிராம மக்கள்

0 1389

பஞ்சாப் மாநிலம் பத்தேகர் சாகிப் பகுதியில் விபத்தில் கவிழ்ந்த சரக்கு லாரியில் இருந்து ஆப்பிள் பெட்டிகளை கிராம மக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாக சமூக ஊடகங்களில் பரவியது

காஷ்மீரில் இருந்து ஆப்பிள்களை அட்டைப் பெட்டிகளில் ஏற்றி வங்காளத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது. லுதியானா டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரி பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

குழந்தைகள், பெண்கள்,சர்தார்ஜிகள் உள்பட பலரும் கார்களிலும் பைக்குகளிலும் ஆப்பிள் பெட்டிகளை அள்ளிச்சென்றனர். அவர்களை ஓட்டுனரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சில நல்லவர்களின் துணையோடு சுமார் 1265 ஆப்பிள் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments