ஆளில்லா விமானம் மூலம் 2 விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்... ரஷ்யா குற்றச்சாட்டு

தெற்கு மத்திய ரஷ்யாவில் உள்ள ரியாசான் மற்றும் சரடோவ் ஆகிய இரண்டு விமான தளங்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரியாசானில் உள்ள டியாகிலெவோ விமானத் தளத்திற்கு சேதம் ஏற்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது.
இதனிடையே உக்ரைனின் தெற்கு பிராந்தியமான ஜபோரிஜியாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது நேற்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments