பேக்கரியில் திடீரென தீப்பற்றி எரிந்த வணிக சிலிண்டர்..!

சேலம் எடப்பாடியில், பேக்கரி ஒன்றில் டீ போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வணிக சிலிண்டரின் நாப் (knob) திடீரென தீப்பற்றிய நிலையில், கடை முழுவதும் தீ பரவியது.
பேக்கரி ஊழியர்கள் சாக்கு துணியால் சிலிண்டரை போர்த்தி, தீயை அணைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், கடையிலிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த நெருப்பை தண்ணீரை பீய்ச்சு அடித்து, அணைத்தனர். எனினும், பேக்கரியிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
Comments