சீனாவில் விதிக்கப்படும் கடுமையான வரிகளால் கோடீஸ்வரர்கள் அதிருப்தி..!

0 1191

சீனாவில், பெருங்கோடீஸ்வரர்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படுவதால், பலர், அயர்லாந்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மூலம் புலம் பெயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு குடியேற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 9 மாதங்களில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அயர்லாந்தில் முதலீட்டாளர்களுக்கான குடியேற்ற விசா பெற, அந்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எட்டரை கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறும், ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனத்தில் 17 கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறும், கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளுக்கு நான்கேகால் கோடி ரூபாய் நன்கொடை வழங்குமாறும், வங்கிக்கணக்கில் 17 கோடி ரூபாய் இருப்பு இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments