"குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக" - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்..!

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில் ஆட்சியமைக்க 92 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், பாஜக 148 இடங்கள் வரை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைக்கும் என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் 42 இடங்கள் வரையும், ஆம் ஆத்மி பத்து இடங்கள் வரையும் கைப்பற்றும் என ரிபப்ளிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பில், பாஜக 131 இடங்களும், காங்கிரஸ் 41 இடங்களும், ஆம் ஆத்மி ஏழு இடங்களிலும் வெல்லும் என குறிப்பிட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சலில், ஆட்சியமைக்க 35 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில், பாஜக 39 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் டிவியும், 38 இடங்கள் வெல்லும் என டைம்ஸ் நவ்வும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 171 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments