மலைப்பாதையில் திடீரென மண்சரிவு.. ராட்சத மரங்கள் சாய்ந்ததால் அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்..!
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாய்ந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் திகைத்துப்போயினர்.
கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்துவருவதாலும், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அதிகளவில் கனரக வாகனங்கள் சென்றுவருவதால் ஏற்பட்ட அதிர்வுகளாலும் மண் சரிவு நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Comments