மது அருந்திவிட்டு தகராறு.. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..!

0 1382

சேலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் தற்கொலை, சந்தேக மரணமாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எருமாபாளையத்தை சேர்ந்த தனபாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கும் மனைவி நந்தினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர்களது 4 வயது மகள், 2 வயது மகனுக்கு கோவிலில் மொட்டையடிக்க முடிவு செய்திருந்த நிலையில், அன்று காலையும் தனபால் மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த நந்தினி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் சேலம் சப் கலெக்டர் மற்றும் அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments