ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் நாய்கள்..!

0 1261

ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில், 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட கடல் நாய்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

2 வாரங்களுக்கு முன்பே இவை இறந்திருக்கக்கூடும் என்றும், தற்போது உடல்கள் கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

அவற்றின் உடல்களில் எவ்வித காயங்களும் தென்படாததால், இறப்பிற்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கடல் நீரில் மாசு கலப்பதால் கடல் நாய்கள் வேகமாக அழிந்து வருவதாகவும், நூறாண்டுகளுக்கு முன் 15 லட்சமாக இருந்த காஸ்பியன் கடல் நாய்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments