டேங்கர் லாரியின் மீது பின்னால் வந்த பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

பொன்னேரி அருகே காலி டேங்கர் லாரியின் மீது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில், பேருந்தின் கிளீனர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தச்சூர் கூட்டுசாலையில் உள்ள மேம்பாலத்தில் இன்று அதிகாலை, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த காலி டேங்கர் லாரி திடீரென பிரேக் அடித்ததால் மோதியதாக கூறப்படுகிறது. பேருந்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்ததில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
பேருந்தையும், சாலையில் கவிழ்ந்த காலி டேங்கர் லாரியையும் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் பிறகு மேம்பாலத்தின் மேல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
Comments