பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தவறாக பேசுவதாக புகார்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து அரளிவிதையை சாப்பிட்ட பெண்

0 1264

கணவர் இல்லாத நேரத்தில் தன்னிடம் தவறாக பேசும் பக்கத்து வீட்டு இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இளம் பெண் அரளி விதையை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதரக்குடிகிராமத்தை சேர்ந்த கண்மணி என்ற பெண், நெப்போலியன் என்பவர் கஞ்சா மற்றும் மதுபோதையில் தன்னிடம் தவறாக பேசுவதாக குன்றக்குடி காவல் நிலையத்தில் மூன்று முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மனுவை கொடுக்க வந்து, அரளிவிதை சாப்பிட்டதால் வாந்தி எடுத்து மயங்கும் நிலைக்கு சென்றதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments