பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

0 1199

நாளை, பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரியமேடு போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், ரயில் நிலையங்களில், பயணிகள் உடைமைகளை ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனையிட்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments