மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6ஆம் ஆண்டு நினைவுதினம் -அதிமுகவினர் அஞ்சலி

0 1302

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். சேலம் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நகர் பூங்கா அருகே அமைந்துள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பேருந்து நிலையம், இந்திராகாந்தி, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்திற்கு தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் ஜெயலலிதாவின் சிலைக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் அதிமுக தொண்டர்கள் அமைதி ஊர்வலம் சென்று பின்னர் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் உப்பளம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் அவர் உறுதிமொழியும் ஏற்றார்.

வி.கே.சசிகலாவும் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பேரணியாக சென்று, மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments