டிச.8ம் தேதி சென்னையில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு ..!

0 2341

வரும் 8ஆம் தேதியன்று, சென்னை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 9ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் கடலூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், 7ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments