வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக பெண் உட்பட இருவர் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று, மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தததாக, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஹெரின் பானு மற்றும் மும்பையை சேர்ந்த அவரது நண்பர் விக்னேஷ் ஆகிய இருவரை தேனாம்பேட்டை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மதுபோதையில் இருந்த அவர்கள் போக்குவரத்து தலைமை காவலர் ராமமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் சிறையிலடைத்தனர்.
Comments