தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய போதை இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்க முயன்றதால் கைது

0 1589

சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டியதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்க முயன்றதாக போதை இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் சிலை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வளைந்து வளைந்து சென்ற 4 பேரை தடுத்து நிறுத்தி, வண்ணாரப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் காளிதாஸ் கண்டித்துள்ளார்.

மதுபோதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

தகலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், மந்தைவெளியைச் சேர்ந்த பாலாஜியை மடக்கி பிடித்து, மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments