சில மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது நுகர்பொருள் வாணிப கழக கட்டிடம்

0 1872

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 25லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக கட்டிடம் சில மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது.

அய்யம்பேட்டை, நத்தம் , முன்னவால்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது.

இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் அரசின் விதிமுறைகளை மீறி, மண்ணால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments