ஓசூர் அருகே தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொலை செய்த வட மாநில பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொலை செய்த வட மாநில பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிரசியைச் சேர்ந்த பர்வதம்மா மற்றும் அவருடைய மகன் குடும்பத்தினர் நெரலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
3வது தளத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாயல்கான் என்ற பெண் குடியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு பர்வதம்மா திடீரென்று மாயமானதால் அதிர்ச்சி அடைந்த மகன் போலீசில் புகார் செய்தார்.
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் பாயல்கான் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது பீரோவில் நகைகள் திருடப்பட்ட நிலையில் பர்வதம்மா கொலை செய்யப்பட்டு சாக்கு பையில் சடலமாக கட்டி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments