டெல்லியில் இன்று பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை தொடக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் அடுத்து நடைபெற இருக்கும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.
பாஜக தலைவர் நட்டா தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் பங்கேற்கின்றனர்.
Comments