மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில விடுமுறை தினத்தை ஒட்டி நேற்று அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று அதிவேகமாக பிரேக் பிடித்து நின்ற போது, அந்த கார் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதேபோல் வரிசையாக 4 கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இதுதொடர்பாக மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments