தாய், மகளை வெட்டி படுகொலை செய்த தாயின் ஆண் நண்பர் போலீசில் சரண்

0 1603

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தாய், மகளை வெட்டி படுகொலை செய்த தாயின் ஆண் நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

3 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த கைம்பெண்ணான பரிமளா, வீரானந்தலில் தனது இரு மகள்கள் மற்றும் மகனோடு வசித்துவந்தார். இதற்கிடையே, காமராஜ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது குழந்தைகள் வளர்ந்ததால் அவருடனான தொடர்பை பரிமளா துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 17 வயது மகள் ராஜேஸ்வரியுடன் கோயிலுக்கு சென்ற பரிமளாவை பின்தொடர்ந்து வந்த காமராஜ், வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன், தடுக்க வந்த ராஜேஸ்வரியையும் வெட்டி கொன்றுவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments