சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம்

சேலத்தில், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டது.
26 வயதாகும் மணிகண்டன், கடந்த புதன் கிழமை பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, லாரி மோதி படுகாயமடைந்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் சனிக்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தார்.
மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
அவரது இதயம், கண்கள், இதய வால்வுகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எட்டு பேருக்கு பொருத்துவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சென்னை, ஈரோடு, கோயம்புத்தூருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டன.
6 வயதிலேயே தாயாரை இழந்து, குடும்பத்தை வழிநடத்திவந்த மணிகண்டனின் உடல் உறுப்புகளை வணங்கி அவரது சகோதரி கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.
Comments