பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

திருவள்ளூரில், வல்லூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 35 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனல்மின் நிலைய மேலாளர் பழனிசாமி சனிக்கிழமை அன்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டு கதவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments