நடிகர் விஜய் திரை பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் விஜய் திரை பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக மதுரையில், அரசு பேருந்தில் பயணித்த ஆண்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கினர்.
சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் பேருந்தில், பயணித்த ஆண்களுக்கு, விஜய் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் டிக்கெட் எடுத்துக் கொடுத்தனர்.
Comments