வீட்டில் தனியாக இருந்த பெண்ணையும், அவரது மகளையும் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த கஞ்சா வியாபாரி கைது..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணையும், அவரது மகளையும் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பகடு பாஸ்கர், ஒரு வாரத்திற்கு முன் ஜாமீனில் வந்துள்ளான்.
சிறையிலிருந்தபோது அவனது இரண்டாவது மனைவி துர்காவிற்கும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கணவனால் கைவிடப்பட்டு மகளுடன் தனியாக வசித்து வந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு துர்காவுடன் நள்ளிரவில் சென்ற பாஸ்கார், கத்தி முனையில் அந்த பெண்ணையும், 12ம் வகுப்பு படிக்கும் அவரது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்து, அதை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பாஸ்கர், துர்கா மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments