தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியிலிருந்து வட கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தஞ்சை, தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 7ஆம் தேதியன்று கடலூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 8ஆம் தேதியன்று விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் 8ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கட்கிழமையன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Comments