கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரசு பேருந்தின் மீது தாக்குதல்

0 1396

காஞ்சிபுரத்தில் பட்டாக்கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து அரசு பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர்கள் தாக்குதல் நடத்தியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இன்று காலை பூக்கடை சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த டி87 எண் கொண்ட அரசுப் பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பேருந்தை வழிவிட சொல்லி சத்தம் போட்டவாறே வந்ததாக கூறப்படுகிறது.

பேருந்து சாலையின் வளைவில் திரும்ப முயற்சித்தபோது முன்னால் வந்து வழிமறித்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் பட்டாக்கத்தியால் தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments