40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வயலில் கவிழுந்து விபத்து

0 3495

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து தேசூர் வழியாக செஞ்சிக்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்து, திரக்கோவில் கிராமத்தில் விபத்துக்குள்ளானதையடுத்து, காயமடைந்த 21 பேர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் பேருந்தை இடது புறமாக திருப்பிய போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments