சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு!

0 1363

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தும் நள்ளிரவு முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.

விமான நிலைய முன்பகுதியில் பயணிகளின் வசதிக்காக 250 கோடி ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 36 ஆயிரம் சதுரஅடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

புறவழிச்சாலை, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகன நிறுத்தத்தில், ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 150 கார்கள் வரை நிறுத்தலாம். மேலும், இங்கு மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments