முதலமைச்சர் செல்லும் வழியில் பாதுகாப்பு வளையத்தை மீறி வாகன சோதனையில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ. ஒருவர் கைது!

0 2591

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே முதலமைச்சர் செல்லும் வழியில் பாதுகாப்பு வளையத்தை மீறி வாகன சோதனையில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கருமத்தம்பட்டி காவல் நிலையம் அடுத்த தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சசிகுமார் என்ற நபரை, எஸ்.ஐ சீருடை அணிந்த நபர் ஒருவர் தடுத்து சோதனை மேற்கொண்டார்.

இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் அந்நபரை பிடித்து விசாரித்தனர். கருமத்தம்பட்டியில் தங்கி நூற்பாலைக்கு வேலைக்கு சென்று வரும் விருதுநகரைச் சேர்ந்த செல்வம், காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வாகன சோதனை நடத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments