சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை சரமாரி தாக்கிய கும்பல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை, 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
கோழிப்போர்விளையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சுஜின்தாஸ் சவாரிக்காக நின்றிருந்தபோது, 5 பேர் வந்து ஏறிய நிலையில், 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் அவர்களை பின் தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.
சுஜின்தாஸ் வீட்டருகே ஆட்டோவை நிறுத்திய 10 பேர் கும்பல், அவரையும், அவரது ஆட்டோவையும் தாக்கினர்.
இதுகுறித்து, நல்ல பிள்ளைபோல், ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரை போலீசார் விசாரித்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான், அவர் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சுஜின்தாஸ் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments