குஜராத்தில் ஓய்ந்தது 2ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம்..

0 1348
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கட்கிழமை நடைபெறும் நிலையில், மாலை 5மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும்  திங்கட்கிழமை நடைபெறும் நிலையில், மாலை 5மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த 1ஆம் தேதியன்று 89 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 63% வாக்குகள் பதிவாகின.

எஞ்சிய தொகுதிகளில் வரும் 5ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

குஜராத்தில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.  வரும் 8ஆம் தேதியன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments