இரவில் வீடுபுகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

0 1455

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை பகலில் நோட்டம் விட்டு, இரவில் மது அருந்திவிட்டு வீடு புகுந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூக்கடைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா கொடுங்கையூரில் உள்ள டீக்கடையில் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது ஏற்கனவே இதுபோன்று பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments