முன்விரோதம் காரணமாக பிரபல தாதா உள்பட இருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை..!

இராஜஸ்தானில், இரு கும்பல்களுக்கிடையேயான முன்விரோதம் காரணமாக பிரபல தாதா உள்பட இருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஷேகாவதி பகுதியில், வீட்டின் வாயிலில் நின்ற தாதா ராஜு தேத்தை, பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிகார் பகுதியில் ராஜு தேத் ஆதரவாளர்கள் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆன்ந்த்பால், பல்பிர் பானுடா கொலைக்கு பழிவாங்கும் விதமாக, ராஜு தேத்தை கொன்றதாக ரோகித் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Comments