மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடிய எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்

0 1148

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். Wheels of brotherhood என்ற குழுவைச் சேர்ந்த பைக்கர்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை ரைடு அழைத்துச் சென்று மகிழ்வித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் பொது பேருந்துகளில் பயணிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்துகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments