மெக்சிகோவில் இளநீர் காய்களுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்த முயற்சி..!

0 1139

மெக்சிகோவில், இளநீர் காய்களுக்குள் மறைத்து கடத்த முயன்ற சுமார் 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 1ம் தேதி சோனோரா மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, இளநீர் காய்களுக்குள் பொட்டலங்களாக சுருட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த ஃபெண்டானில் போன்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும், போதைப்பொருளை கடத்த முயன்ற இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments