தீபத் திருவிழா - பரணி தீபம், மகா தீபத்தைக் காண நாளை ஆன்லைனில் அனுமதிச் சீட்டுகள் வெளியீடு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா அன்று, பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண அனுமதிச் சீட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
காலை 4 மணிக்கு மகா தீபம் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபம் காண 600 ரூபாய் கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் கட்டணத்தில் கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன.
நாளை காலை 10 மணி முதல் பக்தர்கள் கோவில் இணையதளத்தின் மூலம் அனுமதி சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments