காதல் விவகாரம் - மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை கைது..!

திருப்பதி அருகே எதிர்ப்பை மீறி காதலித்த மகளின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தை, 4 மாதங்களுக்கு பின் போலீசில் சிக்கியுள்ளார்.
சந்திரகிரியைச் சேர்ந்த முனிராஜா என்பவரது 19 வயதான மகள் மோகனகிருஷ்ணா, ரெட்டிவாரிப்பள்ளியில் உள்ள உறவினரின் கவனிப்பில் வளர்ந்து வந்தார்.
இந்நிலையில், தொலைதூரக் கல்வி மூலம் பிளஸ்2 பயின்று வந்த அவர், நாகயரிப்பள்ளியை சேர்ந்த வேற்று சாதி சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
தனது மகள் வேற்று சாதி சேர்ந்த இளைஞனை காதலிப்பதை தாங்க முடியாத முனிகிருஷ்ணா தனது மகள் காதலனுடன் வீட்டை வீட்டு ஓடி விட்டால் தனது மானம் போகுமோ என எண்ணி கடந்த ஜூலை 7ம் தேதி மோகனகிருஷ்ணாவை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைத்துள்ளார்.
சமீபத்திய உடற்கூறு ஆய்வில் கிடைத்த தகவலின்பேரில் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தந்தை முனிராஜாவை கைது செய்தனர்.
Comments