"அவர் உயர்கல்வி...... நான், இடைநிலை ஆசிரியர்..." - அப்பாவு பேச்சால் கலகலப்பு..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், 13வது உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர், அமைச்சர் பொன்முடியை உரையாற்ற அழைத்தார்.
அப்போது, பொன்முடியை அமரச் சொன்ன சபாநாயகர் அப்பாவு, "அவர் உயர்கல்வி... நான் இடைநிலை ஆசிரியர்... நான் தான் முதலில் பேசுவேன்" என்று கூறியதால், கலகலப்பான சூழல் உருவானது.
மேடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்தாண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு நிச்சமயமாக மகளிருக்கான உரிமையைத் தொகையை முதலமைச்சர் வழங்குவார் என்று கூறினார்.
Comments