உக்ரைன் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள், பார்சல் குண்டுகளுடன் தபாலில் வந்த மிரட்டல்..!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த பார்சல்களில் விலங்குகளின் கண்கள், லெட்டர் வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்துக்கு பார்சல் குண்டு வெடித்து சில ஊழியர்கள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து தங்களின் தூதரகங்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துமாறு உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மர்ம பார்சல்களுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
Comments