மனநலம் குன்றிய முதியவர் சித்தராக சித்திரிப்பு - கூகுள் பே மூலம் கல்லா கட்டிய கும்பல்..!

கரூரில் சித்தர் என்றழைக்கப்பட்ட மனநலம் பாதித்த முதியவர், மாவட்ட நிர்வாகம் காவல்துறை பாதுகாப்புடன் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார்.
இதனையறிந்த, சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு உணவளித்து, நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் வசிக்க குடிசை அமைத்து கொடுத்தனர்.
இதனைப் பயன்படுத்தி அவரை, 'அரளி சித்தர்', 'பிஸ்கட் சித்தர்' என்று பல பெயர்களை சூட்டி உண்டியல், கூகுள் பே மூலம் பக்தர்களிடம் பணம் வசூலித்து சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறையினரும், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் நேரில் ஆய்வு செய்து, முதியவர் சுப்பிரமணியை மீட்டனர்.
Comments