ஐதராபாத் நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சினேகாபுரி காலனி பகுதியில் கல்யாண சவுத்ரி என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், கல்யாண் சவுத்ரி நகைகளை தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டனர்.
இதை தடுக்க முயன்றவரையும் சுட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Comments