ரஷ்யாவிடமிருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் மீது விலை குறைப்பு..!

0 1404

ரஷ்யாவிடமிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் விலை உச்சவரம்பை நிர்ணயம் செய்துள்ளது.

ஒரு பேரலுக்கு 60 டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் மிகவும் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் செய்துள்ளது.

இது தொடர்பாக ஜி 7 நாடுகள் அமைப்பின் முடிவில் ஐரோப்பிய ஒன்றியமும் தன்னை இணைத்துக் கொண்டது.

திங்கட்கிழமை முதல் இந்த விலை வரம்பு அமலுக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments