உணவு தர தாமதமானதால், கடை ஊழியர் மீது சரமாரியாக தாக்குதல்..!
சென்னை திருவொற்றியூரில் உணவு வர தாமதமானதாகக் கூறி மதுபோதையில் இருந்த இருவர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேரி என்பவருக்கு சொந்தமான ஃபாஸ்ட்புட் கடையில் நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் என்ற இளைஞர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த இருவர் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.
உணவு வர தாமதமானதால் ஆத்திரமடைந்த இருவர் நிர்மலிடம் வம்பிழுத்து, கரண்டி எடுத்து அவர் தலையில் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார், மதுபோதையில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Comments