மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்..!

0 1243

சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிவரும், ஜார்ஜ் ஆபிரகாம், அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிக்கு, கடந்த 3 மாதங்களாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் ஓய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சைதாப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments