அனைத்து கோவில்களிலும் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போனுக்கு தடை..!

0 1298

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

அதன் விசாரணையின்போது, செல்போன் பயன்பாட்டை தடுக்கவும், முறையான உடை அணிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கோவிலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேலும், கோவில் வளாகத்தில் செல்போன்கள் வைக்க பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பண்பாடு, மரபினை காக்கும் வகையிலான உடைகளை பக்தர்கள் அணிய வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்க அந்த உத்தரவுகளை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments