தாலியை வேலி என அறுத்த தி.க வின் பெரியார் திடலில் பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம்..! 90 கிட்ஸ் காதல் ஜோடி செய்த சம்பவம்..!
தாலி பெண்களுக்கு வேலி என்று தாலியை அறுத்து போராட்டம் நடத்திய சென்னை பெரியார் திடலில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி ஒன்று மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது
தாலி பெண்களுக்கு வேலி.... தாலி பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்று கூறி தாலியை அறுத்த சம்பவம் அரங்கேறிய அதே பெரியார் திடலில் உள்ள சுயமரியாதை திருமண நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று தாலி கட்டி திருமணம் செய்துள்ளது.
சென்னை வியாசர் பாடியை சேர்ந்த ஹரிஹரன் - மாம்பாக்கத்தை சேர்ந்த ஷாமினி என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
இறுதி கட்ட 90 கிட்ஸான இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியதால் , இருவரும் பெரியார் திடலில் தஞ்சம் அடைந்து , நண்பர்கள் புடைசூழ சுயமரியாதை திருமணம் செய்து சம்மதித்தனர்
அப்போது மணப்பெண்ணிடம் இது தானே முதல் திருமணம் என்று இரு முறை கேட்டுக் உறுதிப்படுத்திக் கொண்ட அலுவலக பெண் ஊழியர், இப்படித்தான் வர்ராங்க எங்கள மாட்டி விட்டுட்டு போயிடறாங்க என்று அங்கலாய்த்துக் கொண்டார்
23 வயதில் எதற்காக திருமணம் செய்து கொள்கிறீர்கள் ? இன்னும் 2 வயசு கடந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளளாமே ? என்றும் அறிவுரை வழங்கினார்.
மணப்பெண்ணோ, பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்..! என்பது போல அந்த பையனை திருமணம் செய்து கொள்வதில் உருதியாக இருந்ததால் அவர்கள் இருவருக்கும் மாலை மாற்றி உறுதி மொழி ஏற்க செய்து சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்து, சட்டப்படி திருமணத்தை பதிவு செய்தனர்
அதன் பின்னர் மணமக்கள், தி.க மகளிர் அணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்றை செய்யத்தொடங்கினர்.
எங்கு பெண்களுக்கு வேலி என்று தாலி அறுக்கப்பட்டதோ, அதே வளாகத்தில் காதலிக்கு மஞ்சள் கயிற்றால் தாலியை கட்டினார் காதலன் ஹரிஹரன்
அப்படியே மாப்பிள்ளைக்கும் ஒரு தாலியை கட்டி விடுங்கள் என்று திக மகளிரணியினர் உரிமைக்குரல் எழுப்ப, மாப்பிள்ளைக்கு காலில் மெட்டி மாட்டி விடலாமா ? என்று ஆலோசிக்கப்பட்டது .
காலில் ஷூ போட்டு மறைத்து விடுவார் என்று அதனையும் வேண்டாம் என்றனர்.
பின்னர் தாங்கள் வந்த வேலை முடிந்து விட்டதாக வழக்கறிஞருடன் காதல் திருமண ஜோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Comments