சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பம் - நெடுஞ்சாலைத்துறை

0 1203

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு 3 வழித்தடம் அமைக்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, பத்தரை கிலோ மீட்டர் தூரம், நில எடுப்பு பணிகளுக்காக 930 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரத்து 834 கோடி ரூபாயில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான சாலையையையும், 6 ஆயிரத்து 845 கோடி ரூபாயில் புதுச்சேரி - நாகை இடையிலான சாலையையும் நான்கு வழித்தடமாக மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments